பீம்சேனை தலைவர் சத்பால் தன்வர் (கோப்புப் படம்) Instagram | Nawab Satpal Tanwar
இந்தியா

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரராக பொய்கூறி பீம்சேனை தலைவருக்கு கொலை மிரட்டல்!

அன்மோல் பிஷ்னோய் எனப் பொய்கூறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது

DIN

பீம்சேனை தலைவர் சத்பால் தன்வரிடம் அன்மோல் பிஷ்னோய் எனப் பொய்கூறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

பீம்சேனை தலைவர் சத்பால் தன்வருக்கு அக். 30 ஆம் தேதியில் போனில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கொலை மிரட்டல் விடுத்தவர், சத்பாலை துண்டுதுண்டாக வெட்டி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, வெளிநாட்டிலிருந்து அன்மோல் பிஷ்னோய் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக, நவ. 2 ஆம் தேதியில் காவல் நிலையத்தில் சத்பால் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, அன்மோல் பிஷ்னோய் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சத்பாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் ராஜஸ்தானைச் சேர்ந்த விகாஸ் பிஷ்னோய் என்பதும், அன்மோல் பிஷ்னோய் என்று பொய் கூறியதும் தெரிய வந்தது. மேலும், பிஷ்னோய் சமூகத்திற்கு எதிரான பீம்சேனை தலைவரின் கருத்துக்களால், சத்பாலுக்கு பாடம் கற்பிப்பதாக அச்சுறுத்தியதாகவும் விகாஸ் கூறினார்.

அதுமட்டுமின்றி, தனக்கு எந்தக் கும்பலுடனோ குண்டர்களுடனோ எவ்விதத் தொடர்பும் இல்லை என்றும் விகாஸ் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, விகாஸ் பிஷ்னோயை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெலங்கானாவில்.. மாவோயிஸ்ட் மூத்த தலைவர்கள் 2 பேர் சரண்!

"தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது, தமிழர்கள்..." Vijay பேச்சு!

திறமை எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவு உண்மை, நேர்மை முக்கியம்! Vijay குட்டிக் கதை!

"stalin uncle, very wrong uncle" ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி எழுப்பிய Vijay

தவெக மாநாடு நிறைவு! வெளியேறும் வாகனங்களால் திணறும் மதுரை!

SCROLL FOR NEXT