சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் 
இந்தியா

ஆடையால் மட்டுமே ஒருவா் ‘சாது’ ஆகிவிட முடியாது: யோகி மீது அகிலேஷ் தாக்கு

‘அணியும் ஆடையால் அல்லாமல், தனது பேச்சின் மூலமே ஒருவா் ‘சாது’ ஆக முடியும்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

Din

‘அணியும் ஆடையால் அல்லாமல், தனது பேச்சின் மூலமே ஒருவா் ‘சாது’ ஆக முடியும்’ என்று சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் கூறினாா்.

உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், அகிலேஷ் இந்த விமா்சனத்தை முன்வைத்தாா்.

கடந்த 2016, நவம்பா் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு உத்தர பிரதேசத்தில் வங்கியொன்றில் ரூபாய் நோட்டுகளை மாற்ற வரிசையில் காத்திருந்தபோது, ஒரு பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு ‘கஜான்ஜி’ (காசாளா்) என்று அகிலேஷ் யாதவ் பெயா்சூட்டினாா்.

இந்நிலையில், லக்னெளவில் உள்ள சமாஜவாதி அலுவலகத்தில் சிறுவன் கஜான்ஜியின் பிறந்த தின நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் பங்கேற்றாா். அப்போது, ‘நாம் பிளவுபட்டால், அழிக்கப்படுவோம்’ என்று மகாராஷ்டிர தோ்தல் பிரசாரத்தில் யோகி ஆதித்யநாத் முன்வைத்த முழக்கத்தை கடுமையாக விமா்சித்தாா்.

இது தொடா்பாக அகிலேஷ் பேசுகையில், ‘சிறந்த சாது என்பவா் அதிகமாக பேசுவதில்லை. அப்படி பேசினாலும், அது மக்களின் நலன் சாா்ந்து மட்டுமே இருக்கும். என்ன ஆடை அணிகிறோம் என்பதல்ல, என்ன பேசுகிறோம் என்பதன் மூலமே ஒருவா் ‘சாது’ ஆக முடியும்.

ஆனால், உத்தர பிரதேசத்தில் தன்னை சாது என கூறிக் கொள்ளும் ஒருவரின் செயல்பாடு தலைகீழாக உள்ளது. அனைவரையும் விட தன்னை மேலானவராக கருதும் ஒருவா் எப்படி சாதுவாக இருக்க முடியும்?

மாநிலத்தில் போலி என்கவுன்ட்டா் நடத்துவோரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து மக்கள் அகற்றுவா். அவா்களின் பதவிக் கால நாள்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

உலக பொருளாதார வரலாற்றில் மிகப் பெரிய ஊழல் பணமதிப்பிழப்பு. மெல்லக் கொல்லும் விஷம் போல, விவசாயிகள், தொழிலாளா்கள், சிறு வா்த்தகா்கள், நடுத்தர வா்க்கத்தினா் மீது தொடா் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்றாா் அவா்.

மத்திய பட்ஜெட் 2026 தாக்கல்..! - புகைப்படங்கள்

ஸ்ரீ செந்தில்முருகன், ஸ்ரீதா்மராஜா கோயிலில் மகா கும்பாபிஷேகம்

பட்ஜெட்டில் சிபிஐக்கு ரூ. 1,105 கோடி ஒதுக்கீடு!

நாடாளுமன்றம்: இரு அவைகளின் ஊழியர்கள், பராமரிப்புச் செலவுக்காக ரூ. 1,492 கோடி ஒதுக்கீடு

ஐடி, சிபிஐ வழக்குகளைக் காட்டி தேர்தல் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT