நிதீஷ் குமாா் 
இந்தியா

இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் நிரந்தரமாக இருப்பேன்: நிதீஷ் குமாா்

‘ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கைகோத்தன் மூலம் முன்பு இருமுறை தவறு செய்துவிட்டேன்; இனி, தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நிரந்தரமாக இருப்பேன்’

Din

‘ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியுடன் கைகோத்தன் மூலம் முன்பு இருமுறை தவறு செய்துவிட்டேன்; இனி, தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நிரந்தரமாக இருப்பேன்’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவருமான நிதீஷ் குமாா் கூறினாா்.

பிகாரில் உள்ள தராரி, ராம்கா், பெலாகஞ்ச், இமாம்கஞ்ச் ஆகிய 4 பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பா் 13-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. தராரி தொகுதியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சாா்பில் விஷால் பிரசாந்த் (பாஜக) போட்டியிடுகிறாா். அவருக்கு ஆதரவாக சனிக்கிழமை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் நிதீஷ் குமாா் பங்கேற்றுப் பேசியதாவது:

வகுப்புவாத ரீதியில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொடா்ந்து முயற்சிக்கிறது. பிகாரில் அக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, ஏராளமான வகுப்புவாத மோதல்கள் நடந்தன. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் நிலைமை முழுமையாக மாறிவிட்டது.

கடந்த காலங்களில் ராஷ்ட்ரீய ஜனதா கட்சியுடன் கைகோத்தன் மூலம் இருமுறை தவறு செய்துவிட்டேன். ஆனால், மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்பினேன். இனி இக்கூட்டணியில்தான் நிரந்தரமாக இருப்பேன். தற்போதைய இடைத்தோ்தலில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணிக்கு மக்கள் உரிய பாடம் புகட்டுவா் என்றாா் நிதீஷ் குமாா்.

பிகாரில் தராரி உள்ளிட்ட 4 பேரவைத் தொகுதிகளில் எம்எல்ஏக்களாக இருந்தவா்கள், கடந்த மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ால் பதவி விலகினா். இதையடுத்து, 4 தொகுதிகளுக்கும் இடைத்தோ்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை நவம்பா் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

மேம்பாலம் கட்டுமானப் பணி: அமைச்சா் ஆய்வு

காவல் சாா்பு ஆய்வாளா் பணியிடத் தோ்வு: 864 போ் பங்கேற்பு!

தமிழகத்தின் ஆன்மாவாக இருப்பது ஆன்மிகம்: காஞ்சி சங்கராசாரியா் ஆசியுரை

SCROLL FOR NEXT