மகாராஷ்டிரத்தில் பொதுக் கழிப்பறைக்குள் இருந்து 20 வயதான காய்கறி விற்பனையாளர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் நயா நகர் அருகேயுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் இருக்கும் பொதுக் கழிப்பறையின் பயன்பாடு குறித்து, அப்பகுதியினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், அந்தக் கழிப்பறையில் சனிக்கிழமை (நவ. 9) இரவில் ஒருவரின் சடலம் இருப்பதாகக் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அப்பகுதியில் காய்கறி விற்கும் நபர் எனக் கண்டறிந்தனர். தொடந்து, அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், உடற்கூறாய்வு அறிக்கை வெளியானவுடன்தான் உறுதிப்படுத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்க: அதானியைக் காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.