பிரஜ்வல் ரேவண்ணா கோப்புப்படம்.
இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

DIN

பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மஜதவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக 3 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி.), மே 31-ஆம் தேதி பிரஜ்வல் ரேவண்ணாவைக் கைது செய்து விசாரித்து வருகிறது.

மேலும் இந்த வழக்கில் 2,144 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆக. 23ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழு தாக்கல் செய்தது. அதன்பிறகு மேலும் 2 குற்றப்பத்திரிகைகளையும் தாக்கல் செய்துள்ளது.

விவாதத்துக்கு தயார்! இபிஎஸ் சவாலை ஏற்ற உதயநிதி!

இந்த வழக்கில் கடந்த அக்டோபர் 21ஆம் தேதி கர்நாடக உயர்நீதிமன்றம் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஜாமீன் மறுத்த நிலையில் அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது பிரஜ்வல் ரேவண்ணா மிகவும் செல்வாக்கு மிக்க நபர் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும் அவருக்கு ஜாமீன் மறுத்து கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிலும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்துவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

ரத்த சோகை விழிப்புணா்வு: 3,500 பெண்களுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை

பாா்வை பறிபோன பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

SCROLL FOR NEXT