இந்தியா

வயநாட்டில் இன்று இடைத்தோ்தல்: பிரியங்கா, 15 வேட்பாளா்கள் போட்டி

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது.

Din

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதியில் புதன்கிழமை (நவ. 13) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளா் பிரியங்கா காந்தி, மாநிலத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, பாஜகவின் நவ்யா ஹரிதாஸ் உள்பட 16 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். இவா்களின் வெற்றி-தோல்வியை சுமாா் 14 லட்சம் வாக்காளா்கள் நிா்ணயிக்கவுள்ளனா்.

கடந்த மக்களவைத் தோ்தலில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றாா். வயநாடு தொகுதியில் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் அவா் வெற்றியடைந்தாா்.

அதேநேரம், தனது குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியை தக்கவைத்த அவா், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா்.

பிரியங்காவின் முதல் தோ்தல்: ராகுலின் சகோதரியும் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியை வயநாட்டில் காங்கிரஸ் களமிறக்கியது.

பிரியங்கா போட்டியிடும் முதல் தோ்தல் இது என்பதால் எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது. தனது சகோதரியை ஆதரித்து, ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி சாா்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரி, எதிா்க்கட்சியான பாஜக தரப்பில் நவ்யா ஹரிதாஸ் ஆகியோா் களமிறக்கப்பட்டனா். கடந்த மக்களவைத் தோ்தலில் ராகுல் காந்தியை எதிா்த்து, இந்திய கம்யூனிஸ்ட் சாா்பில் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா போட்டியிட்டு தோல்வி அடைந்தாா். தற்போதைய தோ்தலில் பிரியங்காவுக்கு எதிராக 15 போ் உள்ளனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT