இந்தியா

வயநாடு இடைத்தேர்தல்: 8 மணி நிலவரம்!

வயநாடு இடைத்தேர்தலுக்கான 8 மணி வாக்குப்பதிவு நிலவரம்..

DIN

கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கியது.

வயநாடு தொகுதியில் 14 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள 1,354 வாக்குச் சாவடிகளுக்கு மக்கள் காலை முதலே வந்து வாக்களிக்கத் தொடங்கினர்.

வயநாடு மக்களவை மற்றும் சேலக்கரை சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் காரணமாக இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வயநாடு தொகுதியில் வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பெட்டா ஆகிய ஏழு சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. கோழிக்கோடு மாவட்டத்தில் திருவம்பாடி, மலப்புரம் மாவட்டத்தில் ஏரநாடு, நிலம்பூர் மற்றும் வண்டூர் ஆகிய தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

​​ஒரு மணிநேர வாக்குப்பதிவு முடிந்த நிலையில் வயநாடு மக்களவைத் தொகுதி, கேரளத்தின் சேலக்கரை சட்டப்பேரவைத் தொகுதிகள் முறையே 6.96 மற்றும் 7.2 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வயநாடு தொகுதியில் வெற்றிபெற்ற ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியிலும் வெற்றி பெற்றதையடுத்து, வயநாடு தொகுதியில் ராஜிநாமா செய்தார்.

வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி வயநாட்டில் 2,500-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தினம் தினம் திருநாளே!

சுமை ஆட்டோ மோதி தொழிலாளி பலி

முகமது சின்வார் கொல்லப்பட்டார்: ஒப்புக்கொண்ட ஹமாஸ்!

வெண்கலப் பதக்கம் வென்றது சாத்விக்/சிராஷ் இணை!

உலக தடகள சாம்பியன்ஷிப்: 19 பேருடன் இந்திய அணி

SCROLL FOR NEXT