முகப்பு
சத்திரபதி சம்பாஜி நகரில் மோடி
இந்தியா

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி திட்டம்!

புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல..

இந்தியா

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் கூட்டணி திட்டம்!

புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல..

Updated On : 14 நவம்பர், 2024 at 10:51 AM
சத்திரபதி சம்பாஜி நகரில் மோடி
பகிர்:

காஷ்மீருக்கு தனி அரசியலமைப்பை உருவாக்க காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் திட்டமிட்டுள்ளதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

சத்திரபதி சம்பாஜி நகரில் பேரணியில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி கூறியதாவது,

பாகிஸ்தான் மொழியைப் பேசும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை மகாராஷ்டிர மக்கள் ஆதரிப்பார்களா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. காஷ்மீரில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு இந்தியரும் விரும்புகிறார்கள்.

பாஜக தலைமையிலான மஹாயுதி அரசு, அவுரங்காபாத்தை சத்ரபதி சம்பாஜிநகர் எனப் பெயர் மாற்றம் செய்து, சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் விருப்பத்தை நிறைவேற்றியது.

இந்த நகரத்தை சத்ரபதி சம்பாஜிநகர் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பாலாசாகேப் தாக்கரேவால் எழுப்பப்பட்டது என்பது முழு மகாராஷ்டிராவுக்கும் தெரியும். இந்த முடிவை ரத்து செய்ய காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தை நாடியது.

மகாவிகாஸ் அகாதி அரசு இரண்டரை ஆண்டுகளாக ஆட்சியிலிருந்தது. ஆனால் காங்கிரஸின் அழுத்தத்தால் நகரத்தின் பெயரை மாற்றும் தைரியம் அதற்கு இல்லை என்றார்.

மகாராஷ்டிரத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் புதிய அரசைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் மட்டுமல்ல. மக்களின் தலையெழுத்தை மாற்றுவது..

இந்தத் தேர்தலில் ஒருபக்கம் சாம்பாஜி மகாராஜாவை நம்பும் தேசபக்தர்களும், மறுபுறம் அவுரங்கசீப்பைப் புகழ்ந்து பேசுபவர்களும் உள்ளனர்.

மஹாயுதி இருந்தால் மகாராஷ்டிரத்தில் முன்னேற்றம். மராத்திக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மகாராஷ்டிர மற்றும் மராத்வாடா மக்கள் பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் நவம்பர் 20ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நவ.23ல வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →