மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மீட்புப் பணி PTI
இந்தியா

உ.பி. அரசு மருத்துவமனையில் தீ விபத்து: 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு!

குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து

DIN

அரசு மருத்துவக் கல்லூரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் சிகிச்சைப் பிரிவில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு பராமரிப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் நிகழ்விடத்துக்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன.

எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தன. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள மாநில முதல்வா் யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், இந்த சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

மயிலாடுதுறை இளைஞர் ஆணவக்கொலை: காதலி பரப்பரப்புப் பேட்டி!

பிரதமர் மோடியின் பிறந்தநாள் ஒரு கருப்பு நாள்: காங்கிரஸ் எம்பி விமர்சனம்!

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய சிறகடிக்க ஆசை! டிஆர்பி பட்டியல் வெளியீடு!

ஓடிடியில் மதராஸி எப்போது?

SCROLL FOR NEXT