வினோத் தாவ்டே 
இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே?

மகாராஷ்டிர தேர்தல் நாளை நடைபெறவிருக்கும் நிலையில், பணம் கொடுத்து சிக்கிய பாஜக தலைவர் வினோத் தாவ்டே

DIN

மகாராஷ்டிர மாநிலம், நாளை நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இருக்கும் நிலையில், பாஜக தேசிய பொதுச் செயலர் வினோத் தாவ்டே, வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில், வாக்காளர்களுக்கு வினோத் தாவ்டே பணம் வழங்கியதாக பகுஜன் விகாஸ் அகாதி தலைவர் ஹிதேந்திர தாக்குர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இது தொடர்பான விடியோ ஒன்று காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், ஒரு நட்சத்திர விடுதியில், வினோத் தாவ்டேவை ஏராளமான பகுஜன் விகாஸ் அகாதி ஆதரவாளர்கள் சூழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர் முன்பு, தொண்டர்கள் பணத்தை அசைத்துக் காட்டுவதும் பதிவாகியுள்ளது.

ஒரு பையில், ஏராளமான பணத்தைக் கொண்டு வந்து விடுதியில் தங்கியிருந்த வினோத் தாவ்டே, அங்கு மக்களவை வரவழைத்து அவர்களிடம் பணம் கொடுத்திருப்பதாகவும் காங்கிரஸ் எக்ஸ் பக்கத்தில் குற்றம்சாட்டியிருக்கிறது.

இது குறித்து பொதுமக்கள் அறிந்தபோது, அவரை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மேலும், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் வலியுறுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT