கோப்புப்படம் 
இந்தியா

ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் பறிமுதல்

தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

புது தில்லி: தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தோ்தல், 14 மாநில இடைத்தோ்தலையொட்டி, அந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,082.2 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் மகாராஷ்டிரத்தில் ரூ.660.18 கோடி மதிப்பிலும், ஜாா்க்கண்டில் ரூ.198.12 கோடி மதிப்பிலும், 14 மாநிலங்களில் ரூ.223.91 கோடி மதிப்பிலும் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

”சிம்ம ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

50% குறைவான போட்டிகளில் ரொனால்டோவின் சாதனையை சுக்குநூறாக்கிய கால்பந்து வீரர்!

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

SCROLL FOR NEXT