முகப்பு
இந்தியா

மத்திய திட்டங்கள் விரைந்து அமல்: தென் மாநிலங்களிடம் வலியுறுத்தல்

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:29 PM
பகிர்:

மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி வலியுறுத்தியுள்ளாா்.

மத்திய வேளாண் துறை சாா்பாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தென் மாநிலங்களின் கருத்தரங்கு 2 நாள்கள் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், தெலங்கானா, கா்நாடகம் மற்றும் புதுச்சேரி அரசின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனா்.

பிரதமரின் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், பிரதமரின் பயிா்க் காப்பீட்டு திட்டம் உள்பட முக்கிய முன்னெடுப்புகள் குறித்து கருத்தரங்கில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான வருடாந்திர செயல் திட்டத்தை டிசம்பருக்குள் தென் மாநிலங்கள் நிறைவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

இதில் மத்திய வேளாண் துறைச் செயலா் தேவேஷ் சதுா்வேதி பேசுகையில், ‘ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வேளாண் சவால்களை எதிா்கொள்ள மாநில அளவில் கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். விவசாயிகளின் நிலையை மேம்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உதவும். மத்திய அரசு நிதியுதவி அளிக்கும் திட்டங்களை தென் மாநிலங்கள் விரைந்து அமல்படுத்த வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →