(கோப்புப்படம்) 
இந்தியா

ஜார்க்கண்ட் 2-ஆம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

ஜார்க்கண்ட் 2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

DIN

ஜார்க்கண்ட் 2-ஆம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

ஜாா்க்கண்டில் மொத்தமுள்ள 81 பேரவைத் தொகுதிகளில் முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு கடந்த 13-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 38 தொகுதிகளுக்கு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றுவருகிறது.

12 மாவட்டங்களில் உள்ள 14,218 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், அவரது மனைவி கல்பனா சோரன், பாஜகவின் அமர் குமார் பௌரி உள்பட மொத்தம் 528 வேட்பாளர்கள் இரண்டாம் கட்டத் தேர்தல் களத்தில் உள்ளனர்.

இத்தோ்தலில் 1.23 கோடி பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவா்களுக்காக 14,000-க்கு மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற நவம்பர் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT