இந்தியா

மகாராஷ்டிர தேர்தல்: அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களிப்பு!

மகாராஷ்டிர தேர்தலையொட்டி முக்கிய அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் வாக்களித்தனர்.

DIN

மகாராஷ்டிர தேர்தலையொட்டி முக்கிய அரசியல் தலைவா்கள், திரைப் பிரபலங்கள் ஆகியோர் வாக்களித்தனர்.

மகாராஷ்டிர பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(நவ.20) காலை 7 மணிக்கு தொடங்கியது. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு இன்று(நவ. 20) ஒரே கட்டமாக தோ்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இங்குள்ள 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் பொதுமக்கள், முக்கிய அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்டோர் காலை 6.30 மணி முதலே வாக்குச் சாவடிகளில் குவியத் தொடங்கினர். வாக்குப் பதிவு காலை 7 மணியளவில் தொடங்கியது.

மகாராஷ்டிர ஆளுநர் சிபி. ராதாகிருஷ்ணன், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் அவரது மனைவி, மகராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார், இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அவரது மனைவி அஞ்சலி, மகள் சாரா, பாலிவுட் பிரபலங்கள் அக்‌ஷய் குமார், ராஜ்குமார் ராவ், கௌதமி கபூர் மும்பையில் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன்!

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

SCROLL FOR NEXT