சஞ்சய் ராவத் 
இந்தியா

மகாராஷ்டிரத்தில் மகா விகாஸ் அகாதி 165 இடங்களில் வெல்லும்: சஞ்சய் ராவத்

மகராஷ்டிரத்தில் ஆட்சியை தக்கவைப்பது யார்?

DIN

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி 160 முதல் 165 இடங்களைக் கைப்பற்றும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்தார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நவ. 20 (நேற்று) ஒரே கட்டமாக நடைபெற்றது. இதையொட்டி, 288 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளின் அடிப்படையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மொத்தமாக 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதுதொடர்பாக சஞ்சய் ராவத் கூறுகையில்,

நவ.23ல் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக மகா விகாஸ் அகாதி தலைவர்கள் அனைவரும் வியாழக்கிழமையான இன்று கூட்டம் கூடி ஆலோசனை நடத்துவார்கள் என்று மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ராவத் கூறினார்.

புதன்கிழமை வாக்குப்பதிவு நடந்து முடிவடைந்தப் பிறகு, பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான கூட்டணி வெற்றிபெறும் எனக் கணித்துள்ளன. மேலும் சிலர் மேற்கு மாநிலத்தில் எம்.வி.ஏ கூட்டணிக்கு முன்னிலையிலு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகா விகாஷ் அகாதி மற்றும் எங்கள் கூட்டணிக் கட்சிகளாக பிடபிள்யுபி, சமாஜ்வாதி கட்சி, இடதுசாரிக் கட்சிகள் உள்ளிட்ட சிறு கட்சிகளும் பெரும்பான்மையைத் தாண்டிவிட்டன.

288 தொகுதிகளில் 160-165 இடங்களில் வெற்றி பெறுவோம். மாநிலத்தில் நிலையான ஆட்சி அமையும். நான் அதை மிகவும் நம்பிக்கையுடன் சொல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மகா விகாஸ் அகாதி முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா (யுபிடி), காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (எஸ்பி) ஆகியவற்றை உள்ளடக்கியது.

ஆளும் மகாயுதியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகள் உள்ளன.

மஹாயுதி கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்க உறுதியான முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சியான மகா விகாஸ் கூட்டணி மாநிலத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் அதன் நல்ல ஆட்சியைத் தொடரும் என்று நம்புகிறது.

புள்ளிவிவரங்களின்படி, 2019 மாநிலத் தேர்தலில் 61.74 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, ​​புதன்கிழமை நடைபெற்ற மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பொருத்திருந்து பார்ப்போம் மகாராஷ்டிரத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT