முகப்பு
தமிழ்நாடு

திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம் : எடப்பாடி பழனிசாமி

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான் என எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 2:54 PM
எடப்பாடி பழனிசாமி - படம் - அதிமுக
பகிர்:

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைப்பது சந்தேகம்தான் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 15) தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''பெரும்பாலான சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்துதான் நான் முதல்வரானேன். உழைத்து உழைத்து படிப்படியாக முன்னேறியுள்ளேன். ஆனால், அப்பா வழியில் முதல்வரானவர் மு.க. ஸ்டாலின். கருணாநிதி உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது கூட கட்சிப் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவில்லை. திறமையற்றவர் மு.க. ஸ்டாலின்.

திமுக கூட்டணி ஆட்டம் கண்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி நிலைக்குமா? என்பது சந்தேகம் தான். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என காங்கிரஸ் கோருகிறது. இது தொடர்பாக உறுதியான முடிவை அறிவிக்காமல் திமுக பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கிறது.

மின்சாரக் கட்டணம், குடிநீர் வரி உயர்வு, விலைவாசி விண்ணை முட்ட உயர்வு, காலியிடங்களை நிரப்பவில்லை. மக்களை கடன்காரர்கள் ஆகிவிட்டது.

5 ஆண்டுகளில் ரூ. 5 லட்சம் கோடி கடன் வாங்கி மக்களை கடன்காரர்கள் ஆக்கியுள்ளது திமுக ஆட்சி. டெண்டர்கள் மூலம் திமுக ஊழல் செய்கிறது. 5 ஆண்டுகள் சாதனையை ஆயிரம் ஆண்டுகள் பேசும் என பொதுமேடைகளில் மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.

திமுக ஆட்சியில் பல ஊழல்கள் நடந்துள்ளன. டெண்டர் மூலம் திமுக அரசு ஊழல் செய்கிறது. மணல் கொள்ளைக்கு அதிகாரிகளே உடந்தையாக செயல்படுகின்றனர். தேர்தல் நேரத்தில் எந்த வழக்கிலும் சிக்காமல் பத்திரமாக இருப்பார்கள்.

விவசாயிகள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை.

என்னைப் பற்றி தனி விமர்சனம் கூறியிருக்கும் ஸ்டாலின், விளம்பரத்தை நம்பியே ஆட்சி செய்கிறார்.

அதிமுக ஆட்சியில் விவசாயம் செழித்திருந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கினோம்.

அதிமுக ஆட்சி அமைந்ததும் குடிமராமத்துப் பணிகள் தொடங்கப்படும். தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வோர் விகிதம் முன்பு இருந்ததை விட குறைந்துள்ளது'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

summary

DMK-Congress alliance unlikely to last: Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.