அஜாஸ் கான். 
இந்தியா

பிக்பாஸ் பிரபலம் மகாராஷ்டிர தேர்தலில் 155 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி!

பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

DIN

பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் வெர்சோவா தொகுதியில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு கடந்த 20ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன.

தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைவிடவும் பாஜக தலைமையிலான கூட்டணி அசுர வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.

வெர்சோவா தொகுதியில் ஆஷாத் சமாஜ் கட்சி சார்பில் பிரபல டிவி நடிகரும், பிக்பாஸ் போட்டியாளருமான அஜாஸ் கான் போட்டியிட்டிருந்தார். இந்த நிலையில் அவர் 155 வாக்குகளை மட்டுமே பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளார்.

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்பாராதவை: ராகுல் காந்தி

அதேசமயம் நோட்டாவுக்கு 1298 வாக்குகள் கிடைதுள்ளது.

இத்தொகுதியில் சிவசேனை (உத்தவ் தாக்கரே) வேட்பளார் ஹரூன் கான் 65 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேர்தலில் தோல்வியுற்ற அஜாஸ் கானை இன்ஸ்டாகிராமில் 56 லட்சம் பேர் பின்தொடருகின்றனர்.

தற்போது அஜாஸ் கானின் இந்த தோல்வியை இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை குணம் கொண்டவர்கள் மிதுன ராசிக்காரர்கள்!

பிக் பாஸ் 9: சுபிக்‌ஷாவுக்கு தவெகவினரின் ஆதரவு அதிகரிப்பது ஏன்?

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

SCROLL FOR NEXT