பிரதமர் மோடி(கோப்புப்படம்) PTI
இந்தியா

நல்லாட்சிக்கு வெற்றி தந்த மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி- பிரதமர் மோடி

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

DIN

மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், மகாராஷ்டிரத்தில் நல்லாட்சிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. கூட்டணி ஒற்றுமையும், வளர்ச்சியும் வெற்றி பெற்றுள்ளது.

களத்தில் பணியாற்றிய தேசிய ஜனநாயக கூட்டணி நிர்வாகிகளுக்காக பெருமைப்படுகிறேன். கூட்டணிக்கு சிறப்புமிக்க வெற்றியை வழங்கிய மகாராஷ்டிர மக்களுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் பாஜக கூட்டணிக்கு வாக்களித்த ஜார்க்கண்ட் மக்களுக்கு நன்றி.

மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதிலும், மாநிலத்திற்காக உழைப்பதிலும் முன்னணியில் இருப்போம். ஆட்சியமைக்க உள்ள ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியை வாழ்த்துகிறேன் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். மகாராஷ்டிரம் மற்றும் ஜாா்க்கண்ட் பேரவைத் தோ்தல்களில் பதிவான வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வயநாடு மக்களவைத் தொகுதியில் பிரியங்கா வெற்றி

அதில், மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை(ஷிண்டே)-தேசியவாத காங்கிரஸ்(அஜீத் பவாா்) கட்சிகளின் ‘மகாயுதி’ கூட்டணியும், ஜாா்க்கண்டில் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியும் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இரு மாநிலங்களிலும் பாஜக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கணிப்புகள் கூறியுள்ள நிலையில், ஜாா்க்கண்டில் வாக்குக் கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வந்துள்ளன. அங்கு ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா தலைமையிலான கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் டெய்கின்!

நீதிபதியை தாக்குவதா?வழக்குரைஞர் மீது கடும் நடவடிக்கை எடுக்க கார்கே வலியுறுத்தல்!

பிளாக் நூடுல்ஸ்... நிகிதா தத்தா!

என்னவென்று சொல்வதம்மா... ராஷி சிங்!

பத்திரிகையாளர் சந்திப்பில் காந்தார படக்குழுவினர் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT