கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!!
கமேனி கொல்லப்பட்டதற்கான அறிகுறிகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு...
ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி உயிரோடு இருப்பதற்கான அறிகுறிகள் இல்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் அமீர் நசீர்சாதேவும், புரட்சிகர காவல்படையின் தளபதி முகமது பாக்பூரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஈரான் மீது அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை சனிக்கிழமை தொடங்கின. முதல் தாக்குதல், ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகம் அருகே நடத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
Advertisement
Advertisement
இதில், ஈரான் தலைமை மத குரு கமேனி கொல்லப்பட்டதாக செய்திகள் பரவிய நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவர் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டு மக்களிடம் தொலைக்காட்சி மூலம் நெதன்யாகு பேசுகையில், இஸ்ரேலின் தாக்குதலில் சர்வாதிகாரி (கமேனி) கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஈரான் மக்கள் திரளாக வீதிகளுக்கு வந்து அரசுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து ஆட்சியைக் கலைக்குமாறு நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, கமேனி மற்றும் அதிபர் மசூத் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
1989 ஆம் ஆண்டு முதல் ஈரானின் உச்ச தலைவராக இருக்கும் கமேனி, அந்நாட்டு படைகளின் தலைமைத் தளபதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Khamenei is unlikely to be alive! Israeli Prime Minister Netanyahu!!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.