சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா கோப்புப் படம்
இந்தியா

சிக்கிம் இடைத்தேர்தல் வெற்றி அறிவிப்பு!!

போட்டியாளரின்றி ஆளுங்கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

DIN

சிக்கிம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

சிக்கிம் மாநிலத்தின் நம்சி, சோரெங் தொகுதிகளில் நவ. 13 ஆம் தேதியில் இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்தலில் இருந்து விலகுவதாக முன்னாள் முதல்வர் பவன் சாம்லிங் தலைமையிலான எதிர்க்கட்சி சிக்கிம் ஜனநாயக முன்னணிக் கட்சி அறிவித்தது.

இதனையடுத்து, ஆளுங்கட்சியான சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், சோரெங் தொகுதியில் ஆதித்யா கோலேவும், நம்சி தொகுதியில் சதீஷ் சந்திரராயும் வெற்றி பெற்றுள்ளனர்.

முதல்வர் பிரேம் சிங் தமங் மகன்தான், சோரெங் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

மெல்லிசையே.. கௌரி கிஷன்!

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின் புகழாரம்!

SCROLL FOR NEXT