PTI
இந்தியா

மகாராஷ்டிரம்: 60 ஆண்டுகளுக்குப்பின் எதிர்க்கட்சித் தலைவர் இல்லா பேரவை!

மகாராஷ்டிர தேர்தல்: எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்குக்கூட எந்தவொரு எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

DIN

மகாராஷ்டிர தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு மிக பலத்த அடியைக் கொடுத்துள்ளது.

சனிக்கிழமை (நவ. 23) நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில், ஆளும் ‘மகாயுதி’ கூட்டணி மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது. பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில், இக்கூட்டணிக்கு 230 இடங்கள் கிடைத்துள்ளன.

இக்கூட்டணியில் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று, பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவுக்கு, இந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குப்பதிவு அதிகமாக நடைபெற்றுள்ளது. ஆளும் மகாயுதி கூட்டணியின் இமாலய வெற்றிக்கு இதுவும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா தேர்தலில் சட்டப்பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு கூட எந்தவொரு எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

எதிா்க்கட்சிகளின் மகா விகாஸ் அகாடி கூட்டணியில், சிவசேனை (உத்தவ்) கட்சி 20, காங்கிரஸ் 16, தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா்) கட்சி 10, சமாஜவாதி 2, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1, இந்திய விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் கட்சி 1 என 50 இடங்களே கிடைத்தன.

சட்டப்படி, மாநில சட்டப்பேரவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 10 சதவீத உறுப்பினர்களை தனியாக ஒரு கட்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்து அக்கட்சியினருக்கு கிடைக்கும்.

ஆனால் இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்தாலும், தனியொரு கட்சியாக எதிர்க்கட்சிக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சிக்கும் அந்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. மகாராஷ்டிர பேரவையில் எதிா்க்கட்சித் தலைவா் அந்தஸ்தை பெறும் அளவுக்கு (29) கூட எந்த எதிா்க்கட்சியும் வெற்றி பெறவில்லை.

இதனையடுத்து, மகாராஷ்டிரத்தில் புதிய அரசு பதவியேற்றதும், எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத நிலை கடந்த 60 ஆண்டுகளுக்குப்பின் இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காவல்துறை புதிய ஆணையராக சிறைத்துறை டிஜிபி கோல்ச்சா நியமனம்: மத்திய உள்துறை உத்தரவு

ரஷிய போா் முனைக்குள் தள்ளப்படும் இந்திய தமிழா்களை மீட்க வேண்டும்:பிரதமரிடம் துரை வைகோ கோரிக்கை

தெருநாய்கள் தொல்லை: மக்கள் அச்சம்

மாவட்ட ஹாக்கிப் போட்டி: கோவில்பட்டி பள்ளி அணிகள் வெற்றி

குறுக்குச்சாலை பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

SCROLL FOR NEXT