விளம்பரதாரர் செய்திகள்

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்

வணிகப் பெருக்கச் செய்தி

DR T R பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியின் நான்காவது மாநில மாநாடு கடலூர் மாவட்டம் வேப்பூரில் பிப்ரவரி 8, ஞாயிறு பிற்பகல் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த மாநாட்டின் நுழைவு வாயில் செங்கோட்டையின் அச்சு அசலான தோற்றத்திலும், மாநாட்டு மேடை தலைமைச் செயலகத்தின் வடிவிலும் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது. கடலூர் சாலை நெடுகிலும் இருபுறமும் ஐஜேகே கட்சிக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.

பரந்து விரிந்திருந்த மாநாட்டுத் திடல் முழுவதும் பச்சைக் கம்பளம் விரிக்கப்பட்டு நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் பெட்டி பெட்டியாக தடுத்து இருக்கைகளை அமைத்திருந்ததோடு அகலமான நடைபாதைகளும் ஒதுக்கப்பட்டு இருந்தன. மாநாட்டுக்கு வந்திருந்த அனைவருக்கும் அவரவர்
 

லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்ட இந்த மாநாட்டு திடலில், நூறு அடி உயர கொடி கம்பத்தில், ஐ. ஜே. கே கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார் இளையவேந்தர் Dr ரவி பச்சமுத்து.

தொடக்கத்திலும் இடையிடையேயும் வேந்தர் ஐயா எழுதி உருவாக்கிய பாடல்கள், AI தொழில்நுட்பத்தில் காட்சிப்படுத்தப்பட்டு LED திரையில் மின்னியது.

இருக்கையிலேயே இளைப்பாற சிற்றுண்டிப் பைகளும், இந்திய ஜனநாயக கட்சியின் மஃப்ளரும் வைக்கப்பட்டிருந்தன. தொண்டர்கள் அனைவருக்கும் போதுமான வகையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிவறை மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. மாநாட்டின் தொடக்கத்தில், பறையிசைக் கலைஞர்கள் முதல் கூத்துக்கலைஞர்கள் வரை ஏராளமானோர், பொய்க்கால் குதிரை, மானாட்டம், மயிலாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை உற்சாகமூட்டினர். 

"ஓர் குடும்பம் என்றும் நாடாண்டால் தம்பி, 

ஒரு நாளும் தமிழ்நாடு விடியாது தம்பி, 

புதிய திட்டம் கொண்டுவர எவ்வாறு முடியும், 

தந்தை வழி தனயர்களும் நாடாள வந்தால், 

புதிய சிந்தனைகள் நாடாள எப்படித்தான் வருமோ? 

என்ற வரிகளுக்கு ஐ.ஜே.கே தொண்டர்கள் குழுக்களாக நடனமாடி ஆர்ப்பரித்தனர். 

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் DR T R பாரிவேந்தர், ஐஜேகே வின் தலைவர் இளைய வேந்தர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோர் மாநாட்டுத் மேடைக்கு வந்தவுடன்
தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

IJK நான்காவது மாநில மாநாட்டில் 11 தீர்மானங்கள்

IJK நான்காவது மாநில மாநாட்டில் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

1. மக்கள் விரோத ஊழல் மலிந்த ஆட்சியை நடத்துகின்ற திமுக அரசுக்கு கண்டனம்

2. நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பிரதமர் மோடி, இபிஎஸ் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஆட்சி அமைய வேண்டும் 

3. சாதி சமய மத அடிப்படையில் வேற்றுமைகள் வளர்வதை தடுக்க சிறுபான்மையினர் என்று பயன்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில், 'மைனாரிட்டி' என்ற சொல்லை நீக்கத் தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் 

4. கல்வி வேலை வாய்ப்புக்கு அளிக்கப்படும் முன்னுரிமையான இட ஒதுக்கீடு, ஜாதி மத அடிப்படையில் அல்லாமல் பொருளாதார அடிப்படையில் அளிக்கப்பட வேண்டும் 

5. விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் 

6. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் 

7. கச்சத்தீவை மத்திய அரசு உடனே மீட்டு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட வேண்டும் 

8. வன்கொடுமை தடுப்புச் சட்டமான பி.சி.ஆர். சட்டத்தில் உரிய சட்ட திருத்தங்களை மேற்கொண்டு ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் 

9. மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் PM SHRI பள்ளிகள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அமைக்கப்பட வேண்டும்.

10. போராடிக் கொண்டிருக்கும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை மாநில அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் 

11. ஒவ்வொரு ஒன்றியத்திலும் நெல் கொள்முதல் செய்ய, மூடப்பட்ட கிடங்குகளை உடனடியாக திறக்க வேண்டும் 

டாஸ்மாக் மூடப்பட வேண்டும், பெண்களுக்கு சம உரிமை வேண்டும், ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட ஐ.ஜே.கே வின் கொள்கைகளை மாநாட்டின் உறுதி மொழிகளாக பாரிவேந்தர் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

வாழ்த்துரை வழங்கிய தலைவர்கள்

ஐஜேகே-வின் பொருளாளர் ஜி ராஜன், பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கோவை தம்பி, பார்க்கவ குல முன்னேற்ற சங்கத்தின் சட்ட ஆலோசகர் வெங்கடேசன், கடலூர் அதிமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன், அதிமுக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் குமரகுரு, அதிமுக சட்டமன்ற கொறடா தாமரை ராஜேந்திரன், ஐஜேகே பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து முன்னிலை உரை

இந்த மாநாட்டிற்கு பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறார்கள். அது ஒரு நல்ல விஷயம். ஒரு பெண் முன்னேறினால் அந்த குடும்பமே முன்னேறும். பெண்கள் அரசியலில் ஆர்வமுடன் கலந்துகொள்வது வரவேற்கத்தக்கது. ஆண்கள் அவர்களை சிரமத்திற்கு உள்ளாக்காமல் இருந்தாலே போதும் என்று தெரிவித்தார் ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்து.

தமிழ் மொழி வளமான மொழி தமிழர்கள் வெற்றியாளர்கள் என்று தமிழைப் பற்றியும் தமிழர்களின் சிறப்பை பற்றியும் பிரதமர் மோடி செல்லுமிடமெல்லாம் தனது உரையில் புகழ்ந்து பேசி வருகிறார்.

உலகம் முழுவதும் எக்கனாமிக்கல் வார், பயோ வார் என்று உலகப் போருக்கான பதட்டமான சூழல் நிலவிவரும் வேளையில் நாம் பிரதமர் மோடியின் கரங்களை இறுகப்பற்றி அவருக்கு வலு சேர்க்க வேண்டும். பிரதமர் மோடியை போலவே தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள மற்ற கட்சித் தலைவர்களும் மக்களுக்கும் நாட்டுக்கும் சிறப்பான பங்காற்றி இருப்பதாக தெரிவித்த அவர், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை கொண்டு வந்ததே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் என்றும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு வெற்றி கூட்டணி என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார். 

அய்யா எழுதிய பாடல்களை எல்லாம் கேட்டபோது உணர்ச்சி மேலீட்டினால் நானே நெகிழ்ந்து போய் விட்டேன். 

இளைஞர்கள் எப்படி வாழ வேண்டும் யாரைப் பின்பற்றி வாழ வேண்டும், கலைஞரைப் பின்பற்றிப் போவது தவறில்லை அதாவது நடிகர்களை பின்பற்றுவதில் தவறில்லை. ஆனால் அவர் எம்ஜிஆர் போல மக்கள் நலன் நிலைக்கும் நடிகராகவும் இருக்க வேண்டும் என்று தனது உரையை நிறைவு செய்தார். 

தொண்டர்களின் கூட்டம் ஆட்சி மாற்றத்தை உறுதிப்படுத்துகிறது - நயினார் நாகேந்திரன் பேச்சு

பாஜகவின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்புரையாற்றினார். 

எஸ்.ஆர்.எம் நிறுவனத்தில் மட்டும் 5,000 மாணவர்களுக்கும் மேல் இலவசமாக படிப்பதற்கு உதவி செய்கிறார். மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு இலவச சிகிச்சை அளித்து உதவுகிறார். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லெண்ணத்தை பெற்றவர்.

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்துள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளும், இந்த மாநாட்டில் அலை கடலென திரண்டிருக்கும் தொண்டர்களின் கூட்டமும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகிறது. 

பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் பேசும்போது, தமிழ்நாட்டில் இன்று ஆளும் கட்சியின் மீது மக்களுக்கு மாபெரும் வெறுப்பு உண்டாகி இருக்கிறது. அதன் எதிரொலியை நமது கூட்டணிக் கட்சிகள் நடத்தும் அத்தனை கூட்டங்களிலும் மாநாடுகளிலும் காண முடிகிறது என்று நயினார் நாகேந்திரன் பேசினார்

திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்- Dr டி. ஆர். பாரிவேந்தர் உரை 

இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கி ஐ.ஜே.கே. நிறுவனர் திரு டி. ஆர், பாரிவேந்தர் உரையாற்றியாவது:

இந்த வெற்றி மாநாட்டின் மூலம் நாம் வெற்றி விழாவை கொண்டாடி உள்ளோம். நான் 3 பாடல்கள் எழுதி உள்ளேன். கட்சி தொண்டர்களுக்கு சொல்லும் செய்தியைதான் நான் பாடலில் எழுதி இருக்கிறேன்.

நமது கட்சி தொடங்கப்பட்டு 15 ஆண்டு ஆகிறது. அனைத்து தேர்தலிலும் நமது கட்சி போட்டி யிட்டு உள்ளது. பெரம்பலூர் எம்.பி.யாக நான் இருந்தபோது பல பணிகளை செய்துள்ளேன். 

நமது கட்சியின் 3வது மாநாட்டில் கலந்து கொண்ட கூட்டத்தை பார்த்து கூட்டணிக்கு அழைத்தார் ஜெயலலிதா. நமது கட்சியின் 2 கண்கள், நாடு மற்றும் நமது மாநிலம். நாடு வளர வேண்டும். நாடு வளர்ந்தால் மாநிலம் வளரும். நமது கட்சி மிகப்பெரிய வளர்ச்சி கண்டு உள்ளது. 10 ஆண்டுகளில் மருத்துவம், கல்விக்காக 650 கோடி செலவிட்டு உள்ளேன். 36,000 பேருக்கு கல்வி உதவியும், 3 லட்சம் பேருக்கு மருத்துவ உதவியும் செய்து தந்துள்ளேன்.

அரசியலுக்கு, பதவிக்காக வரவில்லை. ஏழைகளுக்கு உதவவே வந்துள்ளேன். மக்கள் இலவசத்திற்கு ஆசைப்பட கூடாது. இந்த நிலை மாற வேண்டும். இந்திய ஜனநாயக கட்சி ஒழுக்கமான கட்சி. படித்தோரால் நடத்தப்படும் பண்புள்ள கட்சி.

இவ்வாறுதிருடி.ஆர். பாரிவேந்தர்பேசினார்.    

ஐஜேகே நடத்திய மாநாடு அவ்வளவு சிறப்பாக திட்டமிட்டு நடத்தப்பட்டது. மாநாட்டுக்கு அலை கடலென தொண்டர்கள் கூட்டம் திரண்டு வந்திருந்த போதும், அனைவரும் ஒரு ஒழுங்கை கடைபிடித்து கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டதைக் காண முடிந்தது. பல ஆண்டுகளாக கல்வியிலும் மருத்துவத்திலும் சேவையாற்றி வரும் பாரிவேந்தர் ஐயாவின் கட்சித் தொண்டர்கள் எந்த அளவுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாட்டுடனான ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள் என்பதற்கு இந்த மாநாடே சான்று என்றால் அது மிகையில்லை. அப்படி தலைமையின் வார்த்தைக்கு கட்டுப்படக்கூடிய தொண்டர்களைக் கொண்ட ஒழுக்கமான ஒரு கட்சியாக ஐஜேகே திகழ்கிறது என்பதற்கு இந்த மாநாட்டு காட்சிகளே சாட்சி.

பொறுப்புத் துறப்பு: இது ஒரு விளம்பர தகவல். நிபந்தனைகள் பொருந்தும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேபாளத்தை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இத்தாலி அபார வெற்றி!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

பீகாகர்கி மரண வழக்கில் பாபா கைது! விசாரணையில் வெளியான அதிர்ச்சி!!

மேல் வயிற்றில் வலி அல்லது எரிச்சலா? ஏன்? என்ன செய்ய வேண்டும்?

அதர்வாவின் இதயம் முரளி படத்தில் ஃபகத் ஃபாசில்!

SCROLL FOR NEXT