பிடிபட்ட போதைப்பொருள்களுடன் கடலோரக் காவல் படையினர் 
இந்தியா

5 டன் போதைப்பொருள்கள் பறிமுதல்: 6 பேர் கைது!

அந்தமானில் 5 டன் போதைப்பொருள்களைக் கடலோரக் காவல் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

DIN

அந்தமானில் 5 டன் அளவிலான போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்த இந்தியக் கடலோரக் காவல்படையினர் 6 பேரைக் கைது செய்துள்ளனர்.

அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படை டோர்னியர் விமானத்தின் விமானி நவம்பர் 23 அன்று, வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, போர்ட் பிளேர் பகுதியில் இருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாரென் தீவின் அருகே ஒரு மீன்பிடி படகு சந்தேகத்திற்கிடமாக இருப்பதை கவனித்தார்.

பின்னர், அந்தப் படகின் வேகத்தைக் குறைக்குமாறு எச்சரித்த விமானி அந்தமான் நிக்கோபார் கடற்படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தப் படகில் மியான்மரைச் சேர்ந்த 6 பேர் இருந்துள்ளனர். பின்னர், அதிகாரிகள் அங்கு விரைந்து விசாரணைக்காக நேற்று (நவ. 24) அந்தப் படகை போர்ட் பிளேர் துறைமுகத்திற்கு இழுத்து வந்தனர்.

விசாரணையில், அவர்கள் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை இந்தியா மற்றும் அருகிலிலுள்ள நாடுகளுக்கு விநியோகம் செய்ய எடுத்துச் செல்வது தெரியவந்துள்ளது.

பின்னர், மியான்மரைச் சேர்ந்த 6 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3,000 மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 டன் அளவிலான போதைப் பொருள்கள் மற்றும் படகினை கடலோரக் காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அந்தமான் பகுதியில் பிடிபட்ட போதைப்பொருள்களில் இது மிக அதிகளவில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2019 மற்றும் 2022 ஆண்டுகளில், இந்திய கடல் எல்லைகளுக்குள் நுழைய முயன்ற வெளிநாட்டு கப்பல்களிலிருந்து இதே போன்ற போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

சென்னை ரயில்வே கோட்டத்தில் ஆண்டு வருவாய் அதிகரிப்பு

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு 3,570 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கலப்பட மஞ்சள்: புகாா் அளிக்க உணவுப் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT