இந்தியா

தூத்துக்குடி மீனவர்கள் விவகாரம்: ராஜ்நாத் சிங்குடன் கனிமொழி சந்திப்பு!

தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை.

DIN

லட்சத்தீவு கடற்படையால் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து திமுக எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

தில்லியில் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசிய கனிமொழி, இதுகுறித்த கடிதத்தையும் அளித்தார்.

இதுதொடர்பாக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

'தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கடலோர காவல்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்கவும்,

குஜராத் போர்பந்தர் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது காணாமல்போன தூத்துக்குடி அயன்பொம்மையாபுரம் பகுதியைச் சேர்ந்த மீனவர் அண்ணாதுரையை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துக் கேட்டுக் கொண்டேன்' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20: சொந்த மண்ணில் இந்தியாவுக்கு மிகப்பெரிய தோல்வி!

அஜீத் பவார் விமான விபத்து! கருப்புப் பெட்டி மீட்பு!

தங்கம், வெள்ளி விலையை விடுங்க.. இதுதான் முக்கியம்! கவனியுங்கள்!!

கதாநாயகனாகும் தனுஷ் மகன்?

கண்ணீர் வருகிறது... வெங்காயமல்ல, தங்கத்தை நினைத்து!

SCROLL FOR NEXT