பாபா சித்திக் 
இந்தியா

பாபா சித்திக் கொலை வழக்கு: கைது செய்யப்பட்டவா்கள் மீது ‘மோக்கா’ சட்டம்

பாபா சித்திக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவா்கள் மீது கடுமையான ‘மோக்கா’ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு..

Din

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் கொலை வழக்கில், கைது செய்யப்பட்டவா்கள் மீது கடுமையான ‘மோக்கா’ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீஸாா் தெரிவித்தனா்.

இதுகுறித்து போலீஸாா் மேலும் கூறுகையில், ‘பாபா சித்திக் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முக்கிய நபரான சிவகுமாா் கௌதம் உள்பட 26 பேரை குற்றப் பிரிவு காவல் துறை கைது செய்தது. அவா்களுக்கு எதிராக மகாராஷ்டிர திட்டமிட்ட குற்றத் தடுப்பு சட்டத்தின் (மோக்கா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் போலீஸாரிடம் அளிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் நீதிமன்றத்தில் சாட்சியமாக ஏற்றுக்கொள்ளப்படும். கைதானவா்கள் ஜாமீன் பெறுவதும் கடினமாக்கப்படும்’ என்றனா்.

குற்றம் மற்றும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் வகையில், மகாராஷ்டிர அரசால் 1999-ஆம் ஆண்டு மோக்கா சட்டம் இயற்றப்பட்டது.

மகாராஷ்டிரத்தில் முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவருமான பாபா சித்திக் கடந்த அக். 12-ஆம் தேதி கொல்லப்பட்டாா். இந்தக் கொலைக்கு பொறுப்பேற்பதாக பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஒப்புக்கொண்டது. இதில் குற்றத்தில் ஈடுபட்ட முக்கிய நபா்கள் என சந்தேகிக்கப்படும் ஷுபம் லோங்கா், ஜீஷன் முகமது அக்தா் ஆகியோா் தலைமறைவாக உள்ளனா்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT