சாலை விபத்து 
இந்தியா

உ.பி.யில் சாலை விபத்து: 5 பேர் பலி, 6 பேர் படுகாயம்

சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததில் சோகம்..

DIN

உத்தரப் பிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் அதிவேகமாக வந்த கார் ஆட்டோவின் மீது மோதியதில் இரண்டு வாகனங்களும் சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட மேலும் ஆறு பேர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பஹ்ரைச்-ஷ்ராவஸ்தி சாலையில் கிலாவுலா மற்றும் இகோவுனா இடையேயான இடத்தில் மதியம் 12 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக காவல்துறை கண்காணிப்பாளர் கன்ஷ்யாம் சௌராசியா தெரிவித்தார்.

பஹ்ரைச்சில் இருந்து இகோவுனா நோக்கி சாதாரண வேகத்தில் பயணிகள் நிறைந்த ஆட்டோவில் கார் பின்னால் இருந்து மோதியது. மோதல் பலமாக இருந்ததால் ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் விழுந்ததாகவும், கார் சமநிலையை இழந்து அதே பள்ளத்தில் விழுந்ததாகவும் அவர் கூறினார்.

ஆட்டோவில் ஓட்டுநர் உள்பட ஒன்பது பேரும், காரில் இரண்டு பேரும் இருந்தனர். ஆட்டோவில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் மூவர் இகோவுனா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர். காயமடைந்த மீதமுள்ள ஆறு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் மேல் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விபத்து குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

அயோத்தி கோயில் கொடியேற்ற விழா! குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு!

விழிகளில் வழிந்திடும் அழகு... குஹாசினி

ராகுல் காந்தியின் பேரணியில் இணைகிறது திரிணமூல் காங்கிரஸ்!

குளத்தில் மூழ்கி சுங்கத்துறை பணியாளா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT