சம்பல் மாவட்டத்தில் ஏற்பட்ட கலவரம் ANI
இந்தியா

சம்பல் மாவட்டத்துக்குள் வெளி நபர்கள் நுழையத் தடை நீட்டிப்பு!

சம்பலில் கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து, வெளி நபர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது பற்றி...

DIN

உத்தரப் பிரதேச மாநிலம், சம்பல் மாவட்டத்துக்குள் கட்சித் தலைவர்கள் உள்பட வெளி நபர்கள் நுழைவதற்கானத் தடையை நீடித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

சம்பல் மாவட்டத்தில் உள்ள ஜாமா மசூதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2-ஆம் கட்ட ஆய்வுக்கு எதிா்ப்பு தெரிவித்து நடைபெற்ற வன்முறையின்போது துப்பாக்கிச்சூட்டில் மூவா் உயிரிழந்தனா்.

காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை எனவும், சம்பவம் தொடா்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையில், முதல்கட்டமாக 10 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலையில், சம்பல் மாவட்டம் முழுவதும் மிகவும் பதற்றமான சூழல் நிலவுவதால், சமூக செயல்பாட்டாளர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்பட மாவட்டத்துக்குள் முன் அனுமதியினறி வெளி ஆள்கள் நுழைவதற்கு தடை விதித்து ஆட்சியர் ராஜேந்திர பைஸியா உத்தரவிடப்பட்டிருந்தது.

தற்போது இந்த தடையை மேலும் டிசம்பர் 10 வரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - கன்னி

வார பலன்கள் - சிம்மம்

வார பலன்கள் - கடகம்

வார பலன்கள் - மிதுனம்

வார பலன்கள் - ரிஷபம்

SCROLL FOR NEXT