கே. கவிதா 
இந்தியா

பிஆர்எஸ் கவிதா மருத்துவமனையில் அனுமதி!

பிஆர்எஸ் கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பற்றி...

DIN

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரதிய ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவருமான கவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இன்று இரவுக்குள் வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகவும் கவிதாவின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, கவிதாவுக்கு அதிக காய்ச்சல் மற்றும் மகப்பேறு பிரச்சினை ஏற்பட்டன.

இந்த பிரச்சினைகளை தொடர்ந்து, ஏற்கெனவே தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கவிதா அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார்.

5 மாதம் சிறை

தில்லி கலால் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவின் ஹைதராபாத் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை செய்த நிலையில், மார்ச் 15-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தில்லி திகார் சிறைக்கு மாற்றப்பட்ட கவிதாவுக்கு 5 மாதங்களுக்கு பிறகு ஆகஸ்ட் 27-ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா எந்த அச்சுறுத்தலுக்கும் அடிபணியாது: வெங்கையா நாயுடு

என்எல்சி நிகர லாபம் ரூ.839.21 கோடி

ரிஷப ராசிக்கு தன்னம்பிக்கை! தினப்பலன்கள்!

ரூ.2,250 கோடியில் விரைவில் ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம்: அதிகாரிகள் தகவல்

பழங்குடியினரின் வாழ்வியலை ஆவணப்படுத்த தொல்குடி மின்னணு களஞ்சியம் இணையம்: அமைச்சா் மதிவேந்தன் தொடங்கி வைத்தாா்

SCROLL FOR NEXT