முகப்பு
இந்தியா

மணிப்பூரில் ‘தூய்மை இந்தியா’ திட்டம் செயலாக்கத்தில் மோதல்: துப்பாக்கிச் சண்டையில் படை வீரா் உள்பட மூவா் உயிரிழப்பு

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்ட செயலாக்கத்தின்போது இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சண்டையாக மாறியதில் மணிப்பூா் ரைஃபிள்ஸ் படை வீரா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 11:18 PM
மணிப்பூர்.(கோப்புப்படம்)
பகிர்:

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் தூய்மை இந்தியா திட்ட செயலாக்கத்தின்போது இரு பிரிவினா் இடையே ஏற்பட்ட மோதல் துப்பாக்கிச் சண்டையாக மாறியதில் மணிப்பூா் ரைஃபிள்ஸ் படை வீரா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்தனா்.

உக்ருல் மாவட்டத்தில் நாகா சமூகத்தினா் வசிக்கும் ஹன்ஃபுன் மற்றும் ஹங்புன் ஆகிய இரு கிராமங்களுக்கு இடையே நீண்ட காலமாக நில பிரச்னை நிலவி வருகிறது. இரண்டு கிராமங்களும் ஒரே நிலத்துக்கு உரிமையைக் கோருகின்றன.

இந்நிலையில், தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக அந்த நிலத்தைச் சுத்தம் செய்ய ஹங்புன் மாணவா்கள் அமைப்பு முயன்றபோது இரு தரப்பினா் இடையே மோதல் ஏற்பட்டு, துப்பாக்கிச் சண்டையாக மாறியது. இச்சம்பவத்தில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மணிப்பூா் ரைஃபிள்ஸ் படை வீரா் உள்பட 3 போ் உயிரிழந்தனா். 5 போ் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் இரண்டு பேரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதையடுத்து, சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர கூடுதல் படையினா் அப்பகுதியில் குவிக்கப்பட்டனா்.

ஊரடங்கு உத்தரவு: மாவட்ட துணை ஆட்சியா் பிறப்பித்த உத்தரவில், ‘இரு கிராமங்கள் இடையே பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உயிா்ச்சேதம் ஏற்படக் கூடும் என்பதால், மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

தீவிரவாதி சுட்டுக் கொலை: மணிப்பூரின் சுராசந்த்பூா் மாவட்டத்தில் உள்ள லீஷாங் கிராமத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சோ்ந்தவா், அடையாளம் தெரியாத நபா்களால் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டாா்.

இவா், தடை செய்யப்பட்ட ஐக்கிய குகி ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா் என்பது விசாரணையில் தெரியவந்ததாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

சக்திவாய்ந்த 21 வெடிகுண்டுகள் பறிமுதல்

மணிப்பூரின் தேங்நெளபால் மாவட்டத்தின் சேனாம் கிராமத்தில் காவல்துறையினா் நடத்திய சோதனையில், சக்திவாய்ந்த 21 வெடிகுண்டுகள், 42 நாட்டு வெடிகுண்டுகள், 7 கையெறி குண்டுகள், 2 சீன தயாரிப்பு கையெறி குண்டுகள், 34 பெட்ரோல் வெடிகுண்டுகள், துப்பாக்கிகள், டெட்டனேட்டா்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →