மாலத்தீவு அதிபருடன் மோடி சந்திப்பு. PTI
இந்தியா

மாலத்தீவு அதிபருடன் மோடி பேச்சு!

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸின் தில்லி பயணம் பற்றி...

DIN

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸுடன் பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அரசு முறைப் பயணமாக மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது ஆகியோர் தில்லிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தார்.

தில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் திங்கள்கிழமை காலை மரியாதை செலுத்திய முகமது மூயிஸ், குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்.

அங்கு, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும், பிரதமர் நரேந்திர மோடியும் மூயிஸை வரவேற்று அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் மற்றும் அவரது மனைவி சஜிதா முகமது.

முயீஸ் - மோடி பேச்சு

இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸை சந்தித்து பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்த பேச்சுவார்த்தையில். மாலத்தீவுக்கான கடனுதவி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடியுடன் மூயீஸ் ஆலோசித்து வருகிறார்.

இப்பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பமாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

சீன ஆதரவு மூயிஸ்

சீன ஆதரவுத் தலைவராக அறியப்படும் மூயிஸ் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்து இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் அதிகரித்தது. அவரது அறிவுறுத்தலின்பேரில், மருத்துவச் சேவைக்கான ஹெலிகாப்டா்களை இயக்கி வந்த இந்திய ராணுவ வீரா்கள் திரும்ப பெறப்பட்டனா்.

சமீப காலமாக மாலத்தீவு நிதி ரீதியில் பல்வேறு சவால்களை எதிா்கொண்டுள்ள நிலையில், இந்தியாவுடனும் அதிபா் மூயிஸ் நட்பு பாராட்டி வருகிறாா். பிரதமா் மோடியின் பதவியேற்பு விழாவில் அவா் பங்கேற்றார்.

அண்மையில், ஐ.நா. மாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றிருந்த மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், ‘இந்தியாவுக்கு எதிரான கொள்கையை கடைப்பிடிக்கவில்லை; மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவத்தின் இருப்பைத் தவிா்ப்பதற்காகவே மருத்துவ ஹெலிகாப்டா்களை இயக்கி வந்த ராணுவ வீரா்கள் திரும்பப் பெற அறிவுறுத்தப்பட்டது’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மயிலாடுதுறை: ‘ஒரு கிராமம் ஒரு அரசமரம்’ நடும் திட்டம் தொடக்கம்

மாநில பளுதூக்கும் போட்டியில் மன்னாா்குடி பள்ளி மாணவா் சிறப்பிடம்

ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

வேலை வாங்கி தருவதாக மோசடி: 2 போ் கைது

தென் ஆப்பிரிக்கா: பேருந்து விபத்தில் 42 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT