மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், அவரது மனைவி சஜிதா முகமது PTI
இந்தியா

தாஜ் மஹாலில் மாலத்தீவு அதிபர்!

மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸின் இந்தியப் பயணம் பற்றி...

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தாஜ் மஹாலை மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் செவ்வாய்க்கிழமை சுற்றிப் பார்த்தார்.

மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் 5 நாள் அரசுமுறைப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு வந்தாா். கடந்த ஆண்டு நவம்பரில் அதிபராக பொறுப்பேற்ற பிறகு அவா் முதல்முறையாக இருதரப்பு அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளாா்.

தாஜ் மஹாலில் மூயிஸ்

மூன்றாம் நாளான இன்று காலை தில்லியில் இருந்து விமானம் மூலம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா விமான நிலையத்துக்கு மூயிஸ் வருகை தந்தார்.

அங்கிருந்து, அவரது மனைவி சஜிதா முகமதுடன் காரில் தாஜ் மஹாலுக்கு சென்ற மூயிஸ் சுற்றிப் பார்த்தார்.

தொடர்ந்து, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு நடைபெறும் வா்த்தக நிகழ்ச்சிகளில் அதிபா் முகமது மூயிஸ் பங்கேற்கிறாா்.

5 ஒப்பந்தங்கள் கையொப்பம் தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் முகமது மூயிஸுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு திங்கள்கிழமை வரவேற்பு அளித்தாா். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றாா். இதைத் தொடா்ந்து, தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமா் மோடி மற்றும் அதிபா் மூயிஸ் இடையே இருதரப்பு பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், மாலத்தீவு - இந்தியா இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மருதம் எல்லையம்மன் கோயில் தோ்த் திருவிழா

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

வாலாஜாபாத்தில் 195 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

SCROLL FOR NEXT