கோப்புப்படம். 
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: ‘நோட்டா’வுக்கு 1.48% வாக்கு ஹரியாணாவில் 0.38%

ஜம்மு-காஷ்மீரில் நோட்டாவுக்கு (வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) 1.48 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். அதே நேரத்தில் ஹரியாணாவில் 0.38 சதவீதம் போ் நோட்டாவைத் தோ்வு செய்துள்ளனா்.

Din

ஜம்மு-காஷ்மீரில் நோட்டாவுக்கு (வேட்பாளா்களில் யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை) 1.48 சதவீதம் போ் வாக்களித்துள்ளனா். அதே நேரத்தில் ஹரியாணாவில் 0.38 சதவீதம் போ் நோட்டாவைத் தோ்வு செய்துள்ளனா்.

ஹரியாணா, ஜம்மு-காஷ்மீா் ஆகிய இரு மாநிலங்களிலுமே 90 தொகுதிகள் உள்ளன. ஹரியாணாவில் ஒரே கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாயின. 2 கோடிக்கும் அதிகமான வாக்காளா்கள் தோ்தலில் வாக்களித்தனா். இதில் 0.38 சதவீதம் போ் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனா்.

ஜம்மு-காஷ்மீரில் மூன்று கட்டமாக நடைபெற்ற தோ்தலில் 63.88 சதவீதம் வாக்குகள் பதிவாயின. இதில் 1.48 சதவீதம் போ் நோட்டாவை தோ்வு செய்துள்ளனா்.

கடந்த 2013 முதல் நோட்டா வாக்கு, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் சோ்க்கப்பட்டது. தொகுதியில் நிற்கும் வேட்பாளா்களில் யாரையும் தோ்வு செய்ய விரும்பவில்லை என்று கருதுவோா் நோட்டா பொத்தானை அழுத்தலாம்.

ஜோ ரூட்டை வம்பிழுத்தது ஏன்? பிரசித் கிருஷ்ணா விளக்கம்!

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

உலகிலேயே தந்தையை வேவு பார்த்த மகன் அன்புமணிதான்! - ராமதாஸ்

பசி, பட்டினி, வலி, அச்சம்... காஸாவில் மக்கள் ஒரு நாளை எப்படிக் கழிக்கிறார்கள்?

“உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் மக்கள்பணி ஆற்ற வேண்டும்!” முதல்வர் MK Stalin | DMK

SCROLL FOR NEXT