கோப்புப் படம் 
இந்தியா

அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும்!: கன்ஷ்யாம் பிரசாத்

அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035ல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் தெரிவித்தார்.

DIN

புதுதில்லி: அடுத்த நிதியாண்டு உச்சபட்ச மின் தேவை 270 ஜிகாவாட்டை எட்டும் என்றும் இது 2035ல் 446 ஜிகாவாட்டை எட்டும் என்றும் மத்திய மின்சார ஆணையத்தின் தலைவர் கன்ஷ்யாம் பிரசாத் இன்று தெரிவித்தார்.

நடப்பு நிதியாண்டில் சுமார் 40 ஜிகாவாட் மின் உற்பத்தி திறன் சேர்க்கப்படும் என்றார். இந்த ஆண்டு உச்ச மின் தேவைக்கான அரசு கணிப்பு சுமார் 260 ஜிகாவாட் ஆக உள்ளது.

இருப்பினும், மழை மற்றும் குறைந்த வெப்பநிலை காரணமாக இலக்கை அடைய முடியவில்லை. இந்த நிலையில், உச்ச மின் தேவை சுமார் 250 ஜிகாவாட் ஆக இருக்கிறது என்று இந்திய மின்துறை நிலைமை குறித்த விவாத அமர்வு 2047 என்ற மாநாட்டில் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.

மத்திய மின்சார ஆணையம் தொழில் அமைப்பான எஃப் ஐசிசி உடன் இணைந்து இரண்டு நாள் நிகழ்வு (அக்டோபர் 14 மற்றும் 15 தேதி்) ஏற்பாடு செய்யும். இது மின் துறை உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்தின் அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்தும்.

இந்த நிதியாண்டில் உச்ச மின் தேவை 270 ஜிகாவாட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 2035ல் இது 446 ஜிகாவாட்டை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதி ஆண்டு 2026ல் உச்ச மின் தேவையை எளிதாக பூர்த்தி செய்ய முடியும், ஏனெனில் இந்த ஆண்டு கூடுதலாக சுமார் 40 ஜிகாவாட் நிறுவப்படுகிறது.

இதில் 10 ஜிகாவாட் அனல் மின்சாரம், சூரிய சக்தி மற்றும் காற்றாலை 25 முதல் 30 ஜிகாவாட், ஹைட்ரோ மூலம் 3 ஜிகாவாட் மற்றும் 700 மெகாவாட் அணுசக்தி திறன் ஆகியவை அடங்கும்.

மாநிலங்களுடன் கலந்தாலோசித்து மின் பகிர்மானம் உள்ளிட்ட மின்சாரத் துறைக்கான 10 ஆண்டு திட்டம் தயாரிக்கப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

SCROLL FOR NEXT