காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, முன்னாள் தலைவா் ராகுல் காந்தி. (கோப்புப்படம்) 
இந்தியா

ஹரியாணா தேர்தல் தோல்வி: காங்கிரஸ் ஆலோசனை!

ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து தில்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

DIN

ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் தோல்வி குறித்து தில்லியில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஹரியாணாவில் 90 பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த அக். 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை அக். 8 ஆம் தேதி நடைபெற்றதில் பாஜக 48 தொகுதிகளைக் கைப்பற்றி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் -37, இந்திய தேசிய லோக் தளம் -2, சுயேச்சைகள் -3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனால், ஹரியாணாவில் காங்கிரஸ் ஆட்சியைப்பிடிக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியிருந்தன.

இதையடுத்து ஹரியாணாவில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது குறித்து அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தில்லியில் கார்கேவின் இல்லத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் அசோக் கெலாட் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, ஹரியாணாவில் தேர்தல் முடிவுகள் எதிர்பாராதது என்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் காங்கிரஸ் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் கூட்டணி, ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

கவனம் ஈர்க்கும் ரெட்ட தல பாடல் அப்டேட்!

கவிதை எழுதவா... பார்வதி நாயர்!

சூர்ய நிலவு... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT