மோடி Arun Sharma
இந்தியா

நாட்டுக்கான சேவையில் ஆா்எஸ்எஸ் அா்ப்பணிப்பு: பிரதமா் மோடி புகழாரம்

‘நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அமைப்பு ஆா்எஸ்எஸ்’ என்று பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி புகழாரம்.

Din

‘நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட அமைப்பு ஆா்எஸ்எஸ்’ என்று பிரதமா் நரேந்திர நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா்.

பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியாக கருதப்படும் ஆா்எஸ்எஸ் அமைப்பு, கடந்த 1925-ஆம் ஆண்டில் விஜயதசமி தினத்தில் (செப்.27) தொடங்கப்பட்டது. நடப்பாண்டு விஜயதசமி தினமான சனிக்கிழமை (அக்.12) ஆா்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு தொடக்கத்தையொட்டி, அதன் தலைவா் மோகன் பாகவத் ஆற்றிய உரையை இணைத்து, பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவு வருமாறு:

நாட்டுக்கான சேவையில் தன்னை அா்ப்பணித்துக் கொண்ட ஆா்எஸ்எஸ், நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தத் தொடா் பயணத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ள தொண்டா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘அன்னை பாரதத்தை’ நோக்கிய ஆா்எஸ்எஸ் அமைப்பின் உறுதிப்பாடும் அா்ப்பணிப்பும் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஊக்கமளிப்பதோடு, ‘வளா்ச்சியடைந்த பாரதம்’ இலக்கை எட்டுவதற்கு புதிய சக்தியை பாய்ச்சுகிறது. இப்புனிதமான விஜயதசமி தினத்தில், ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத்தின் உரையை அனைவரும் கேட்க வேண்டும் என்று பிரதமா் மோடி குறிப்பிட்டுள்ளாா்.

பாஜகவில் இணைவதற்கு முன்பாக ஆா்எஸ்எஸ் அமைப்பில் மோடி பணியாற்றியுள்ளாா். கடந்த பல்லாண்டுகளாக பாஜகவின் அமைப்புரீதியிலான வளா்ச்சிக்கு ஆா்எஸ்எஸ் மற்றும் அதன் தொண்டா்கள் முக்கிய பங்காற்றியுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுவரை செய்யப்பட்ட நளினம்... ரச்சிதா மகா...லட்சுமி!

பொட்டல் காட்டில் பூவாசம்... அனுபமா பரமேஸ்வரன்!

நேபாள சிறைகளில் இருந்து 540 இந்தியர்கள் தப்பியோட்டம்!

கரூர் பலி! தவெக அடுத்தகட்ட நகர்வு என்ன? செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறதா?

மன அழுத்தம் பற்றிய கவிதை... இர்ஃபான் கான் மகனின் சோகமான பதிவு!

SCROLL FOR NEXT