படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
இந்தியா

கொலையாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை.. -பிரகாஷ் ராஜ் கண்டனம்!

கொலையாளிகளுக்கும் பாலியல் வன்புணர்வாளர்களுக்கும் ஜாமீன் - பிரகாஷ் ராஜ் கண்டனம்

DIN

பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு கைதாகியுள்ள மொத்தம் 18 பேரில், தற்போது 16 குற்றவாளிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பரசுராம் வாக்மோர் மற்றும் மனோஹர் யாதவே ஆகிய இருவருக்கும் ஹிந்துத்துவ அமைப்புகள் சில உற்சாக வரவேற்பு அளித்துள்ள சம்பவம் சமூகத்தில் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ”கொலையாளிகளுக்கும் பாலியல் வன்புணர்வாளர்களுக்கும் ஜாமீன் வழங்கப்படுவதுதான் இந்நாட்டில் சட்டம் போலும்...” எனப் பதிவிட்டு கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது, “மறைந்த பாதிரியார் ஸ்டான் சுவாமி மற்றும் சாய் பாபா ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டு நிர்வாக ரீதியாக சாகடிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் நாம் பார்வையாளர்களாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் எத்தனை பேர் கொல்லப்படுவதை நாம் பார்த்துக்கொண்டே இருக்கப் போகிறோம்??

உமர் காலித்தையும் அரசியல் கைதிகளாக சிறையிலடைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவிக்க, தன்னுடன் இணைந்து குரல் கொடுக்கவும்” பிரகாஷ் ராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நோபல் கிடைக்காவிட்டால் என்ன? அதைவிட பெரியது கிடைத்துவிட்டது: டிரம்ப்

90 பேருக்கு கலைமாமணி விருதுகள்! இன்று வழங்கப்படுகின்றன!!

சீனப் பொருள்களுக்கு கூடுதலாக 100% வரி: டிரம்ப் அதிரடி அறிவிப்பு

பணமோசடி வழக்கு: அனில் அம்பானி ரிலையன்ஸ் குழும நிர்வாகி கைது!

சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் நடுவானில் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு!

SCROLL FOR NEXT