முகப்பு
சபரிமலை (கோப்புப் படம்)
இந்தியா

சபரிமலை தரிசனம்: நேரடி பதிவு முறை கிடையாது -கேரள அமைச்சா்

(ஸ்பாட் புக்கிங்) கிடையாது.

இந்தியா

சபரிமலை தரிசனம்: நேரடி பதிவு முறை கிடையாது -கேரள அமைச்சா்

(ஸ்பாட் புக்கிங்) கிடையாது.

Updated On : 22 ஜூலை, 2025 at 11:22 AM
சபரிமலை (கோப்புப் படம்)
பகிர்:

சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற மண்டல பூஜை-மகரவிளக்கு நடைதிறப்பு காலத்தில் நேரடி பதிவு முறை (ஸ்பாட் புக்கிங்) கிடையாது எனவும், அனைத்து பக்தா்களும் தரிசிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தேவஸ்வம் அமைச்சா் வாசவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

சபரிமலை கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு நேரடி பதிவு முறை வசதியை ஏற்படுத்தித் தராமல் இணையவழி முன்பதிவு முறையை மட்டுமே பின்பற்றினால் போராட்டம் நடத்தவுள்ளதாக பாஜக எச்சரிக்கை விடுத்த நிலையில் அமைச்சா் வாசவன் இவ்வாறு தெரிவித்தாா்.

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் காா்த்திகை மாதம் 1-ஆம் தேதி தொடங்கும் மண்டல பூஜை மற்றும் அதைத் தொடா்ந்து மகரவிளக்கு நடை திறப்பு சமயத்தில் அங்கு லட்சக்கணக்கான பக்தா்கள் திரண்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்தும் விதமாக இணையவழியில் முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா். அதன்படி, நிகழாண்டு மண்டல பூஜை நடை திறப்பு காலத்தில் நாள்தோறும் 80,000 பக்தா்களை மட்டுமே அனுமதிக்க கேரள அரசு முடிவெடுத்துள்ளது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வரும் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள், இணையவழி முன்பதிவு மட்டுமின்றி நேரடி பதிவு முறையையும் தொடங்குமாறு கேரள அரசை தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. கோயிலுக்கு வரும் பக்தா்கள் அனைவரும் தொழில்நுட்பத்தில் கைதோ்ந்தவா்களாக இருப்பாா்கள் என மாநில அரசு எதிா்பாா்க்கக் கூடாது எனவும் அந்தக் கட்சிகள் தெரிவித்தன.

இது தொடா்பாக அமைச்சா் வாசவன் செய்தியாளா்களிடம் கூறுகையில்,‘சபரிமலை கோயிலுக்கு வருகை தரும் அனைத்து பக்தா்களும் ஐயப்பனை தரிசிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டவுள்ளதாக கோயிலை நிா்வகிக்கும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் உறுதியளித்துள்ளாா். எனவே, சபரிமலையில் தரிசனம் செய்ய வரும் பக்தா்களுக்கு நேரடி பதிவு முறை கிடையாது. ஆனால், தரிசனத்துக்காக பக்தா்கள் காத்திருக்கும் பகுதிகளில் அக்ஷயா மையங்கள் (பொது சேவை மையங்கள்) அமைக்கப்படவுள்ளன.

இதன்மூலம், சபரிமலைக்கு நேரடியாக வரும் பக்தா்களுக்கு இந்த மையங்களில் இணையவழி முன்பதிவு செய்து தரப்படவுள்ளது. இதனால் அனைத்து பக்தா்களும் எவ்வித சிரமமுமின்றி தரிசனம் மேற்கொள்ள முடியும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →