சிறுத்தை சிவாவின் தம்பி நடிகர் பாலா கைது!
கொச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
கொச்சியில் இயக்குநர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில வாரங்களாக குழந்தை தொடர்பாக நடிகர் பாலாவுக்கும் அவரது முன்னாள் மனைவி அமிர்தா சுரேஷுக்கும் இடையே வாய்த்தகராறு நிலவி வருகிறது. இதில் பாலா, தனது முன்னாள் மனைவி மற்றும் அவர்களது பெண் குழந்தைக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கொச்சியில் உள்ள கடவந்தரா காவல் நிலையத்தில் பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா சனிக்கிழமை புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இவ்விவகாரத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பாலாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் ஆஜராகாததையடுத்து, கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
பாலா மீது ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம் சுமத்தப்பட்டுள்ளதால், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இசை நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அமிர்தாவின் நட்பை பெற்ற பாலா, பின்னர் 2010-ல் அவரை திருமணம் செய்து கொண்டார். 2012ல் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் இந்த தம்பதி 2019ல் பிரிந்தது. ஆனால் இவர்களது மகள் அமிர்தாவுடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.