கோப்புப்படம் 
இந்தியா

தில்லியில் 2025, ஜன. 1 வரை அனைத்து பட்டாசுகளுக்கும் தடை!

தில்லியில் 2025, ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தில்லியில் 2025, ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற அக். 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற இருக்கின்றன.

இதையொட்டி தில்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, பதுக்கி வைக்கவோ, வெடிக்கவோ முற்றிலும் தடை விதிக்கப்படுவதாக தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் ஆன்லைன் மூலம் நடைபெறும் பட்டாசு விற்பனைக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை இந்த தடை உத்தரவை பின்பற்றி தில்லி மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆகஸ்ட் 22ல் தொடங்கும் கிளாசிக் எலக்ட்ரோட்ஸ் ஐபிஓ!

சுபான்ஷு சுக்லாவையும் விடமாட்டீர்களா? விமர்சிக்கும் காங்கிரஸ்!

இரவில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பிரதமர் மோடியுடன் விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா!

வாக்குத் திருட்டு! தேர்தல் ஆணையம், மத்திய அரசைக் கண்டித்து இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT