ரூ. 12,000 வரை சலுகை... நம்ப முடியாத விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் 13!
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் 2026 விற்பனையையொட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் இணைய விற்பனை தளத்தில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் 2026 விற்பனையையொட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 12 ஆம் தேதி வரை இச்சலுகை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகள், கையடக்கக் கணினி (டேப்லட்ஸ்), புகைப்படக் கருவி மற்றும் பல்வேறு வீட்டு உபயோகப் பொருள்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
அதிகபட்சமாக ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு ரூ. 12,000 வரை சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒன்பிளஸ் நிறுவனம், ஒன்பிளஸ் 13 ஸ்மார்போனை ரூ. 69,900-க்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
அமேசான் எலக்ட்ரானிக்ஸ் பிரீமியர் லீக் விற்பனையில் அமேசான் இணைய தளத்தில் ரூ. 9000 தள்ளுபடியுடன் ரூ. 60,999 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் எஸ்பிஐ, எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ. 3,000 வரை கூடுதல் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய ஸ்மார்ட்போனை கொடுத்துவிட்டு புதிய ஸ்மார்ட்போன் வாங்கினாலும், பழைய ஸ்மார்ட்போனின் மதிப்பு மற்றும் செயல் திறனுக்கு ஏற்ப சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனுக்கு ரூ. 12,000 வரை சலுகை பெற முடியும்.
ஒன்பிளஸ் 13 சிறப்புகள்
6.82 அங்குல கியூ எல்இடி திரை கொண்டது.
ஸ்நாப்டிராகன் 8 எலைட் புராசஸர் உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் உடையது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 4,500 திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
6,000mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் வையர் மூலம் 100W திறனும் வையர் இல்லாமல் 50W திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் பக்கம் மூன்று கேமராக்கள் உள்ளன. 50MP முதன்மை கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா, 50MP அல்ட்ராவைட் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
OnePlus 13 gets unbelievable discount in Amazon Electronics Premier League sale 2026
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.