மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ள வீராங்கனைகள் பட்டியல் வெளியீடு!
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்கும் வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்கும் வீராங்கனைகள் பட்டியல் வெளியாகியுள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மகளிர் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கான ஏலம் கொச்சியில் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்த வீராங்கனைகளுக்கான அதிகாரபூர்வ பெயர் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
27 இடங்களுக்காக நடத்தப்படும் ஏலத்தில் 146 வீராங்கனைகள் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர். அதில் 119 இந்திய வீராங்கனைகள் மற்றும் 27 வெளிநாட்டு வீராங்கனைகள் அடங்குவர்.
சோஃபியா டுங்லி மற்றும் சோபி மோலினக்ஸ் இருவரும் அதிகபட்ச அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்துக்கான பிரிவில் இடம்பெற்றுள்ளனர். ஜி. கமலினி, கிரன் நவ்கிர், ஹீதர் கிரஹாம், ஜெஸ் ஜோனஸன் ரூ. 40 லட்சம் அடிப்படை விலையில் இடம்பெற்றுள்ளனர்.
ரூ.30 லட்சம் அடிப்படை விலைப் பிரிவில் 30 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.
The list of players participating in the Women's Premier League auction has been released.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.