மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: 13 வீராங்கனைகளை தக்கவைத்த ஆர்சிபி!
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் 13 வீராங்கனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நிலையில் 13 வீராங்கனைகளை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் வருகிற அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. மினி ஏலத்துக்கு முன்பாக அணிகள் தங்களுக்குத் தேவையான வீராங்கனைகளை தக்கவைத்தும், விடுவித்தும் வருகின்றன.
அதன் படி, நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் 13 வீராங்கனைகள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், நான்கு பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பெரிதாக மாற்றம் செய்யவில்லை.
தக்கவைக்கப்பட்டுள்ள வீராங்கனைகள்
அருந்ததி ரெட்டி, லாரன் பெல், பிரதியுசா குமார், ரிச்சா கோஷ், ஸ்மிருதி மந்தனா, எல்லிஸ் பெரி, நடைன் டி கிளர்க், பிரேமா ராவத், சயாலி சத்கரே, ஜியார்ஜியா வோல், பூஜா வஸ்த்ரகார், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.
விடுவிக்கப்பட்ட வீராங்கனைகள்
கிரேஸ் ஹாரிஸ், லின்ஸி ஸ்மித், கௌதமி நாய்க், தயாளன் ஹேமலதா.
With the Women's Premier League mini-auction set to take place next month, the Royal Challengers Bangalore team has retained 13 players.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.