FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: ரூ. 1.10 கோடிக்கு ஆஸி. கேப்டனை வாங்கிய யுபி வாரியர்ஸ்!

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட ஆஸ்திரேலிய கேப்டன் குறித்து...

45 வினாடிகள் முன்பு
ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூக்ஸ் - படம்: எக்ஸ் / மகளிர் பிரீமியர் லீக்
பகிர்:

மகளிர் பிரீமியர் லீக் ஏலத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூக்ஸ் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். யுபி வாரியர்ஸ் அணிக்கு ரூ.1.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

மகளிர் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்பாக வீராங்கனைகளுக்கான ஏலம் கொச்சியில் இன்று (அக்டோபர் 28) தொடங்கியது. ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

ஆஸ்திரேலிய கேப்டன் சோஃபி மோலினியூக்ஸ் ரூ. 1.10 கோடிக்கும் இந்திய ஆல்ரவுண்டர் ஸ்நே ராணா ரூ.30 லட்சத்துக்கும் யுபி வாரியர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த அணிக்கு ஸ்பெஷலிஸ்ட் விக்கெட் கீப்பர் இல்லாததால் இந்த முறை இந்தியாவின் விக்கெட் கீப்பர் சுஷ்மா வெர்மா ரூ. 30 லட்சத்துக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

மற்றுமொரு ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான கிரேஸ் ஹாரிஸையும் யுபி வாரியர்ஸ் அணி ரூ.30 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது.

அதேசமயத்தில், இந்திய விக்கெட் கீப்பர் பேட்டர் கமலினியை குஜராத் ஜெயண்ட்ஸ் ரூ.40 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

summary

UP Warriorz rope in Sophie Molineux and Sneh Rana at WPL auction .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments