ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வர் 
இந்தியா

மோசமான வானிலை: புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர்

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

DIN

மோசமான வானிலை காரணமாக மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் ஹெலிகாப்டர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, சதாரா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான டேர் கிராமத்தில் இருந்து புணேவுக்கு வெள்ளிக்கிழமை ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது மழை பெய்யத் தொடங்கியதால் ஹெலிகாப்டர் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியது.

ஹெலிகாப்டரில் பயணம் செய்த முதல்வரும் மற்றவர்களும் பத்திரமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சதாரா காவல்துறை கண்காணிப்பாளர் சமீர் ஷேக் கூறுகையில், “ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மாலை 4 மணியளவில் புறப்பட்டது, ஆனால், மீண்டும் சிறிது நேரத்தில் அங்கேயே திரும்பியது.

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மன்னிப்பு கேட்டது தூர்தர்ஷன்!

சதாரா மற்றும் புணேவில் வானிலை தெளிவாக இருந்தது. ஆனால் தொலைவில் மழை மேகங்கள் இருப்பதைக் கவனித்த விமானிகள் முன்னெச்சரிக்கையாக ஹெலிபேடுக்குத் திரும்ப முடிவு செய்தனர் என்றார். பின்னர் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே காரில் புணே புறப்பட்டுச் சென்றார்.

டேர் கிராமம் சஹ்யாத்ரி மலைத்தொடர்களுக்கு மத்தியில் கொய்னா அணை உப்பங்கழியின் கரையில் அமைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

அரையாண்டில் 5% சரிந்த வீடுகள் விற்பனை

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT