ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்துகொள்வதில் என்ன தவறு: ஏக்நாத் ஷிண்டே
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் நடிகர் சல்மான் கான் கலந்து கொள்வதில் என்ன தவறு என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கேள்வி எழுப்பியுள்ளார்.
மும்பையில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கலந்து கொண்டது குறித்து ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், சல்மான் கான் ஓர் இந்தியர். அவர் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை நம்புகிறவர். அவரை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பதில் என்ன தவறு?
ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி கொண்ட அமைப்பு. ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒவ்வொரு பிரிவிலும் தேச பக்தி ஊக்குவிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
முன்னதாக, ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் சல்மான் கான் கலந்து கொள்வது அவருக்கான அழைப்பா அல்லது இந்து சங்கங்களில் முஸ்லிம்களும் வரவேற்கப்படுகிறார்கள் என்ற அறிவிப்பா? என்று சிவசேனையின் (உத்தவ் தாக்கரே) கேள்வி எழுப்பினார்.
இந்த நிலையில்தான், சிவசேனையின் தலைவரும் மகாராஷ்டிர துணை முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பதிலளித்துள்ளார்.
What is wrong in inviting Salman Khan to RSS event, asks Dy CM Eknath Shinde
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.