கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கு எதிரான வழக்கின் விசாரணை....
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
கரூர் நெரிசல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அரசுப் பணி ஆணை வழங்கவுள்ளார்.
இன்று கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்க உள்ள நிலையில், இதற்கு எதிரான மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
அப்போது விசாரணையின் தொடக்கத்திலேயே, 'கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு பொருளாதார உதவி தேவைதானே? அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர், "பாதிக்கப்பட்டோருக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அரசுப்பணி எதற்கு?
உச்சநீதிமன்றத்தில் கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போது அரசுப் பணி வழங்குவது சரியல்ல. இது சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பாக அமையும்.
கரூர் சம்பவங்கள் போன்ற எதிர்காலத்தில் நடைபெறும் நிகழ்வுகளிலும் இவ்வாறு நடந்தால் அரசுப்பணி கோர வாய்ப்புள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நடத்த கும்பகோணம் மகாமகம் நிகழ்வு, தருமபுரி பேருந்து எரிப்பு சம்பவம், ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு ஆகிய சம்பவங்களுக்கு யாருக்கும் அரசுப்பணி வழங்கப்படவில்லை.
கருணை அடிப்படையில் பணி வழங்கும் விதிமுறைகள் எதுவும் இதில் பின்பற்றப்படவில்லை. இல்லையென்றால் இதுபோன்ற சம்பவங்களுக்கு புதிய விதிகளை உருவாக்க வேண்டும்" என்று வாதங்களை முன்வைத்தார்.
அப்போது 'கரூரில் பாதிக்கப்பட்டோருக்கு அரசுப்பணி வழங்குவது குறித்து சட்டப்பேரவையில் அறிவிக்கப்படவில்லையா?' என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த மனுதாரர், 'சட்டப்பேரவையில் அறிவிப்பு இல்லை. அதுபோல இவர்களுக்கு அரசுப் பணி வழங்கினால் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோர், டிஎன்பிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு முயற்சிக்கும் போட்டித் தேர்வர்களுக்கு ஏமாற்றமாக அமையும்' என்றும் கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில், "முதல்வர் விஜய் தற்போது கரூர் பயணத்தில் இருப்பதால் நிகழ்ச்சியை ரத்து செய்ய முடியாது. எனவே, பாதிக்கப்பட்டோருக்கு அரசுப் பணி வழங்கலாம். ஆனால் அது தற்காலிகமாகவே வழங்க வேண்டும்" என்று கூறி டின்பிஎஸ்சியை எதிர் மனுதாரராக சேர்த்து வழக்கின் விசாரணை ஜூலை 21 ஆம் தேதிக்கு ஒத்தவைத்தனர்.
Karur: What is wrong with providing government job order to victims: Madurai HC Judges
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.