கரூர் பலி: அரசுப் பணி வழங்கலாம்; ஆனால்...! மதுரைக் கிளை முக்கிய உத்தரவு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி நியமன ஆணை வழங்கப்படுவதற்கு எதிரான வழக்கு...
கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரத்தில் இன்று வழங்கப்படும் அரசுப்பணி நியமன ஆணை தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு செப். 27 ஆம் தேதி தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய் தலைமையில் நடந்த பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அவர்களுக்கு அரசு சார்பிலும் கட்சி சார்பிலும் அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
Advertisement
Advertisement
தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 32 பேருக்கு இன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், அரசுப்பணி ஆணை வழங்கவுள்ளார்.
இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், பலியானோரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் பணி நியமன ஆணை வழங்கத் தடையில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேநேரத்தில் இன்று வழங்கப்படும் தற்காலிகமாக பணி நியமன ஆணையாக மட்டுமே இருக்க வேண்டும், இந்த வழக்கு முடியும்வரை இப்படியே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் விஜய் தற்போது கரூர் நிகழ்ச்சிக்கு பயணத்தில் இருப்பதால் அதை ரத்து செய்ய முடியாது என்பதால் இப்போது தற்காலிக அரசுப்பணி வழங்கட்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
karur stampede: Govt job could be granted but one condition: Madurai HC Bench
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.