முகப்பு
தமிழ்நாடு

கரூர் பலி! வழக்கின் தன்மையை அரசுப் பணி நீர்த்துப் போக செய்யும்! மார்க்சிய கம்யூ.

கரூரில் 32 பேருக்கு அரசுப் பணி வழங்குவதற்கு மார்க்சிய கம்யூனிஸ்ட் ஆட்சேபனை தெரிவித்திருப்பது பற்றி...

Updated On : 9 ஜூலை 2026, 3:34 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - X | Shanmugam P
பகிர்:

கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கும் அறிவிப்பை முதல்வர் ஜோசப் விஜய் நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தற்போது முதல்வராகியுள்ள விஜய், கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு முதல்முறையாக நாளை கரூர் செல்லவுள்ளார்.

Advertisement

Advertisement

முதல்வரின் நிகழ்ச்சி நிரல் குறித்து வெளியான செய்திக் குறிப்பில், பல்வேறு அரசுத் துறைகளின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் தொடர்ந்து, பணி நியமன ஆணைகளை தமிழ்நாடு முதல்வர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் பலியானவர்களின் குடும்பத்துக்கு அரசுப் பணி வழங்குவதை நிறுத்திவைக்க வேண்டும் என்று பெ. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் ஏற்கனவே கரூர் வருகை தந்திருந்தபோது, அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சோக சம்பவம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்போவதாகத் தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.

தவெக பிரச்சாரத்தின் போது இறந்தவர்கள் என்பதால், தவெக அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வேலைவாய்ப்பை வழங்குகிறதா என்கிற நியாயமான கேள்வி முன் வருகிறது. மேலும், 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. அதற்குள் இப்படியான அறிவிப்புகள் வெளியாவது, வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்.

சம்பந்தப்பட்ட அரசியல் கட்சி பொறுப்பேற்று, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுத் தருவது என்பது வேறு, அரசு வேலை வழங்குவது என்பது முற்றிலும் வேறானது. எனவே, பல்வேறு முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் அரசு வேலை வழங்குவது தொடர்பாக முறையான ஒரு பொது வழிகாட்டுதலை (Guidelines) அரசு உருவாக்க வேண்டும். அதுவரை, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வேலை வழங்கும் அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

Karur Stampede : government job will dilute the nature of the case — CPIM

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments