PTI
இந்தியா

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் சம்பயி சோரன்..!

ஜார்க்கண்ட் தேர்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டி

DIN

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வேட்பாளராக முன்னாள் முதல்வர் சம்பயி சோரன் போட்டியிடுவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் முடிவடைந்த நிலையில், அடுத்ததாக ஜார்க்கண்ட்டில் மொத்தமுள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நவம்பர் 13, 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில், ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான 66 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று(அக். 19) வெளியிட்டுள்ளது. அதன்படி, சம்பயி சோரன் சராய்கேலா (எஸ்.டி. தொகுதி) தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட்டில் ஆளுங்கட்சியாக உள்ள முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ‘ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில்(ஜேஎம்எம்)’ இருந்து விலகிய அக்கட்சியின் மூத்த தலைவர்களில் முக்கியமானவராக அறியப்பட்ட சம்பயி சோரன், கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின் திடீரென அக்கட்சியிலிருந்து விலகியதுடன், கடந்த ஆகஸ்ட் மாதம் பாஜகவில் இணைந்தார். தனக்குரிய மரியாதையும் அங்கீகாரமும் கட்சியில் தரப்படவில்லை என்பதே அவரது முக்கியக் குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த போது, ஜார்க்கண்ட் முதல்வராக சம்பயி சோரன் 153 நாள்கள் பதவி வகித்தார். அதனைத்தொடர்ந்து சிறையிலிருந்து ஹேமந்த் சோரன் விடுவிக்கப்பட்டதும், சம்பயி சோரனிடமிருந்து முதல்வர் நாற்காலி கடந்த ஜூலை மாதம் பறிக்கப்பட்டதால் அவர் கடும் அதிருப்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சம்பயி சோரன்.

அதேபோல, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் சகோதரர் துர்கா சோரனின் மனைவியான சீதா சோரன் ஜாம்தாரா தொகுதியிலும் பாஜக வேட்பாளராகப் களமிறக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்ஷன் பாகத்துக்கும் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவில்(ஜேஎம்எம்) இருந்து கடந்த மே மாதம் நீக்கப்பட்ட ஹேமந்த் சோரனின் உறவினரான சீதா சோரனுக்கும் பாஜக தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

பக்தியும் நம்பிக்கையும் நிறைந்த நாளில் ஐஸ்வரியத்தை வழங்கட்டும்! - பிரதமர் மோடி

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

SCROLL FOR NEXT