தலித் இளைஞரின் கொலை வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான பினிேபே விஸ்வரூப்பின் மகன் பினிபே ஸ்ரீகாந்தை ஆந்திர போலீஸார் கைது செய்துள்ளார்.
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் கோனசீமா மாவட்டத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, ஜூன் 6, 2022 அன்று துர்கா பிரசாத் என்ற தலித் இளைஞர் கொல்லப்பட்டார். பாதிக்கப்பட்டவரின் புகாரின்பேரில் கடந்த சில நாள்களாக ஸ்ரீகாந்தை போலீஸார் தேடிவந்தனர்.
முன்னதாக இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விக்னேஷ் என்பவர், தலைமறைவாக இருந்த ஸ்ரீகாந்த் உ்ள்பட நான்கு பேரின் பெயர்களைத் தெரிவித்துள்ளார்.
துர்கா பிரசாத் கொட்டிப்பள்ளியில் கோதாவரி ஆற்றின் குறுக்கே படகில் கொண்டுச் செல்லப்பட்டு கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் மதுரை திருமங்கலம் அருகே கடந்த அக்.18ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மதுரையில் உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆந்திர மாநிலத்திற்குக் கொண்டு செல்வதற்கான அனுமதி கிடைத்தபின்னர், காவல்துறையினரால் ஆந்திரத்துக்கு ஸ்ரீகாந்த் அழைத்து வரப்பட்டார்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முந்தைய அரசில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் விஸ்வரூப். கடந்த 2022ல் கோனசீமா மாவட்டத்தின் பெயர் மாற்றம் தொடர்பான வன்முறையின்போது அமலாபுரத்தில் உள்ள அவரது வீடு ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இருப்பினும், அமைச்சரும் அவரது குடும்பத்தாரும் வீட்டில் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பித்தனர்.
இதையும் படிக்க: சிம்பு - 49 படத்தின் இயக்குநர் இவரா?
கைதுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீகாந்த், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். நான் ஒரு மருத்துவர். எனக்கு உயிரைக் காப்பாற்ற மட்டுமே தெரியும். இந்த வழக்கில் தன்னைச் சட்டவிரோதமாகக் கைது செய்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
துர்கா பிரசாத் ஸ்ரீகாந்த்தின் கட்சி நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று வந்தவர் என்றும் கூறப்படுகிறது.
தலித் இளைஞரின் கொலைக்கான காரணம் தெரியவில்லை. திட்டமிட்டு சதி செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீகாந்திடம் ஆந்திர போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.